விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் இணையும் சிம்பு.. என்ன செய்ய போகிறார் தெரியுமா?

வெள்ளி, 25 நவம்பர் 2022 (12:48 IST)
தளபதி விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 
 
இந்த நிலையில் ‘வாரிசு’ திரைப்படத்தில் சிம்பு தற்போது இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ‘வாரிசு’ படத்தின் ஒரு பாடலை சிம்பு பாடி உள்ளதாகவும் இந்த பாடலை படத்தில் இணைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
‘வாரிசு’  படத்திற்காக சிம்பு பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்றும் இந்த பாடல் குறித்த முழுவிவரங்களை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
 
‘வாரிசு’  திரைப்படத்தில் சிம்பு இணைந்துள்ள தகவல் சிம்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மற்றபடி
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்