இந்நிலையில் இப்போது அவர், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படம் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படம் கமல்- மணிரத்னம் இணையும் படத்துக்கு முன்பாகவே உருவாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அவர் வில்லனாக நடிக்க, அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.