சிம்புவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் - நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

சனி, 1 செப்டம்பர் 2018 (13:57 IST)
சிம்பு வாங்கிய அட்வான்ஸை திரும்பக் கொடுக்காவிட்டால், அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
படப்பிடிப்பிற்கு நேரத்திற்கு வராமலும், கொடுத்த கால்ஷீட்டில் முறையாக நடிக்காமலும் இருப்பவர் நடிகர் சிம்பு என பல இயக்குனர்கள் புகார் கூறினர். சிம்புவால் பல கோடிகள் நஷ்டமானதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதில் சிம்புவை வைத்து அன்பானவன், அசராதவன், அடங்காதவன் என்ற படத்தை எடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் ஒருவர்.
இந்நிலையில்  2013-ல் ஃபேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் சிம்புவை வைத்து படம் எடுக்க முன்வந்துள்ளது, அதற்காக ரூ 50 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளனர்.
 
ஆனால் இன்றுவரை அந்த படத்திற்கான கால்ஷீட்டை கொடுக்காமல் சிம்பு அலைக்கழிப்பதாக அவர் மீது மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது. கொடுத்த பணத்திற்கு சிம்பு  வட்டி போட்டு அசலோடு சேர்த்து ரூ 83.50 லட்சம் தர வேண்டும் இல்லையென்றால் அவரது கார், செல்போன் என அனைத்தையும் ஜப்தி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிம்பு 4 வாரத்திற்குள் இதற்கு பதிலளிக்க தவறினால் அவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்