இந்து கடவுளை அவமதித்ததாக வழக்கு! நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு நோட்டீஸ்..

வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (16:08 IST)
இந்து கடவுளை நடிகர் பிரகாஷ்ராஜ் அவமதித்தாக பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 
இது தொடர்பாக வழக்கறிஞர் கிரண் என்பவர் பெங்களூரு நான்காவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
 
அதில் அவர் கூறியிருப்பதாவது,
 
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட தென்னிந்திய  மொழி படங்களில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ், சமீப காலமாக இந்து கடவுள்களை அவதூறாக பேசி வருகிறார். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும் அவர் இந்து மதத்தையும், இந்து கடவுள் வழிபாடுகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
 
இந்துக்கள் கடவுளாக வணங்கும் பசுக்களை அவர் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து வருகிறார். அவரின் இத்தகைய செயல், கோடிக்கணக்கான இந்துக்களை காயப்படுத்தி வருகிறது. இதனால், இவர் மீது சட்டப்படி நடடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
இதையடுத்து, இந்த மனுவை பெங்களூரு நான்காவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். மேலும், இதுகுறித்து விளக்கம் அளிக்க பிரகாஷ்ராஜிக்கு நோட்டீஸ் அனுப்ப மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்