இந்தியன் 2 வில் இருந்து சிம்பு ’கெட் அவுட் ’ஆமா...?

திங்கள், 14 ஜனவரி 2019 (16:43 IST)
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ,சிம்பு ஆகிய இருவரும் இந்தியன் 2 ல் நடிப்பதாக இருந்தது.

இந்நிலையில் திடீரென்று சிம்பு இந்தியன் 2 வில் இருந்து வெளியெறி இருப்பதாக தகால் வெளியாகி உள்ளது.
 
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் 2 படம் பெரிய வெற்றி பெற்றது. ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட அப்படத்தில் கமல்ஹாசன் முதியவர் மற்றும் வாலிபர் ஆகிய இரு தோற்றத்தில் நடித்திருந்தார்.
 
தற்போது இந்தியன் 2 வில் கமலுக்கு பேரன் கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது சிம்பு இதில் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
அவருக்கு பதிலாக சித்தார்த் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால் நடிப்பது உறுதியாகியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்