நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் நடைபெற்ற ஒரு அரசியல் நிகழ்வில் விஜய்யைக் கடுமையாகத் தாக்கியும் சிம்புவையும் புகழ்ந்து பேசினார். அதில் ‘சர்கார் படத்தில் அரசியல் வசனங்கள் பேசினால், ஆமாம் நான் பேசினேன் என தைரியமாக சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு முதல்வரை சந்திக்க நேரம் கேட்பது, ஜெயலலிதா மீது மரியாதை வைத்திருந்தேன் எனக் கூறுவது எல்லாம் அவமானம். எடப்பாடிக்கெ எல்லாமா பயப்படுவது… அவரே மோடியின் அடிமை… பதவிப் போனதும் அவரைப் பக்கத்து வீட்டுக்காரன் கூட மதிக்கமாட்டான்…உன் மேல் நிறைய மரியாதை வைத்திருந்தேன்.. நீயெல்லாம் என் தம்பியா?… இதில் ஒரு விரல் புரட்சியாம்.. என் படத்தில் நடிக்கமாட்டாரம்… ஆனால் நன் பேசும் வசனங்களை எல்லாம் தன் படத்தில் பேசுவாராம்….ரஜினி, கமல் பொட்டல் காட்டில் கம்பு சுற்றுபவர்கள்… தமிழ்நாட்டின் உண்மையான சூப்பர் ஸ்டாராக எனது தம்பி சிம்புதான் வருவான்.. அவனை வைத்து மூன்று படங்கள் எடுக்க உள்ளேன்.. அதற்குப் பிறகுப் பாருங்கள் அவன்தான் ரியஸ் சூப்பர்ஸ்டார்.’ என அனைத்து நடிகர்களையும் கலாய்த்திருக்கிறார்.
சீமானின் சிம்புக் குறித்த பேச்சிற்கு அவரது நண்பரும் இயக்குனருமான அமீர் பதில் அளித்துள்ளார். சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ‘ சீமான் சொன்னதால் மட்டும் சிம்பு சூப்பர் ஸ்டார் ஆகிவிட முடியாஅது. கடந்த காலத்தில் எம்.ஜிஆர் கூடத்தான் தன்னுடைய அரசியல் வாரிசு பாக்யராஜ் என அறிவித்தார். பாக்யராஜு என்ன சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா… கம்ல் கூட தனது இடத்தை மாதவன் நிரப்புவார் எனக் கூறினார்… மாதவன் என்ன அடுத்தக் கமல் ஆகிவிட்டாரா… இதெல்லாம் ஒரு அன்பு மிகுதியாக் கூறுவது.. யார் சூப்பர் ஸ்டாராக வேண்டுமென்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’ எனக் கூறினார்.