கமல் மணிரத்னம் படத்தில் இணையும் பிரபல தமிழ் ஹீரோ!

வெள்ளி, 12 மே 2023 (07:55 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது.

இதன்பிறகு கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால், கமல்ஹாசனும் நயன்தாராவும் இணைந்து நடிக்கும் முதல் படமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் திரைக்கதைப் பணிகளை மணிரத்னம் முடித்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்பாக  மே மாதம் 2 நாட்கள் இந்த படத்துக்கான ப்ரமோஷன் டீசருக்கான ஷூட்டிங்கை மணிரத்னம் நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் முதல் ஹீரோவாக நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக இப்போது தகவல்கள் பரவி வருகின்றன. விரைவில் இது அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. ஏற்கனவே சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்