சிம்புவின் ‘மஹா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வியாழன், 24 மார்ச் 2022 (12:37 IST)
சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர் பத்து தல மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்
 
இந்த நிலையில் சிம்பு நடித்து முடித்துள்ள ‘மஹா’  என்ற திரைப்படம் வெளியாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
. ஹன்சிகாவின் 50வது படமான இந்த படத்தை ஜமீல் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் தமிழக திரையரங்குகள் ரிலீஸ் உரிமையை ஆன்ஸ்கை என்ற நிறுவனம் பெற்றுள்ளது.
 
 சிம்பு, ஹன்சிகா, சந்தானம், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்