சிம்பு மீது ஆத்திரப்படும் ரசிகர்கள் – ‘ஏஏஏ’ எதிரொலி

சனி, 24 ஜூன் 2017 (16:18 IST)
சிம்பு நடித்துள்ள ‘ஏஏஏ’ படம் மிக மோசமாக இருப்பதால், அவருடைய ரசிகர்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.


 

ஒவ்வொரு நடிகரின் படம் ரிலீஸ் என்பது, அந்த நடிகரின் ரசிகர்களுக்கு திருவிழா மாதிரி. தீபாவளி, பொங்கலுக்கு கூட இல்லாத சந்தோஷம், திருவிழா என்றால் கரைபுரண்டு ஓடும். அப்படித்தான் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் சிம்பு ரசிகர்கள். ஆனால், பைனான்ஸ் பிரச்னையால் காலைக்காட்சி தள்ளிப்போக, சென்னையில் 12 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.

சென்னையிலுள்ள காசி தியேட்டரில், முதல் நாள் முதல் ஷோ என்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ரசிகர்களின் விசில் சத்தத்தில், படத்திலுள்ள வசனங்கள் கூட காதில் விழாது. ஆனால், நேற்று அதற்கு எதிர்மாறாக நடந்தது. ஒன்றிரண்டு பேரைத் தவிர, கைதட்டவோ, விசிலடிக்கவோ ஆளில்லை. அந்த அளவுக்கு படு மொக்கையாகவும், ஆபாசமாகவும் இருக்கிறது ‘ஏஏஏ’. சிம்பு வெறியன்கள் என்று சொல்லிக்கொள்ளும் ரசிகர்களுக்கு கூட படம் பிடிக்கவில்லை என்பதுதான் வேதனை.
 

வெப்துனியாவைப் படிக்கவும்