மும்முரமாக நடக்கும் சுசீந்திரன் & சிம்பு காம்போ – அப்போ மாநாடு?

செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (11:07 IST)
சிம்பு நடிப்பில் சுசீந்தரன் இயக்கும் படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்பு இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்குப் பிறகு அவர் மிஷ்கின், சேரன் உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே செய்துள்ளார். இந்நிலையில் இப்போது இயக்குனர் சுசீந்தரன் சிம்புவிடம் கிராமியக் கதை ஒன்றை சொல்லி அதை ஓகே வாங்கியுள்ளாராம்.

மாநாடு படத்துக்குப் பிறகு சிம்பு சுசீந்தரன் இயக்கத்தில்தான் நடிப்பார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போதே சிம்புவின் படத்தின் வேலைகளை சுசீந்தரன் மும்முரமாக செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் மாநாடு படத்துக்கு முன்னதாகவோ அல்லது அதற்கு இணையாகவோ இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்