சூப்பர் ஓவரில் ரோஹித் ஷர்மா செய்த தவறு… அதனால் பறிபோன வெற்றி!

செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (10:27 IST)
மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த பரபரப்பான போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

நேற்று நடந்த 10 ஆவது ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி பின்ச், டிவில்லியர்ஸ் மற்றும் தேவ்தட் படிக்கல் ஆகியோரின் அபாரமான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்களை சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய மும்பை அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்களை இழந்ததால் 15 ஆவது ஓவர் மந்தமாகவே விளையாடியது.

அதன் பின்னர் விஸ்வரூபம் எடுத்த பொல்லார்ட்டும், இஷான் கிஷானும் பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்களைக் கதிகலங்க வைத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியும் 201 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது. அந்த அணியின் இஷான் கிஷான் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து நடந்த சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக விளையாடிய இஷான் கிஷானை இறக்கவில்லை. பொல்லார்ட்டும் பாண்ட்யாவும் இறங்கினர். ஆனால் அவர்களால் பெரிய ஸ்கோரை எட்டமுடியவில்லை. 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து ஆடிய பெங்களூர் அணி 8 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இஷான் கிஷான் இறங்கியிருந்தால் போட்டி வேறு மாதிரி ஆகியிருக்கலாம் என ரசிகர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்