விஜய் சேதுபதி 50 படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

புதன், 12 ஜூலை 2023 (07:32 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் கடந்த மே மாதம் தொடங்கியது. விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இது விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகி வருகிறது.

படத்தின் கதாநாயகி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நட்டி நட்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிக்க, அனுராக் காஷ்யப் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ‘மகாராஜா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியான நிலயில் இன்று இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.

மேலும் படத்தின் டைட்டில் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்