பிரபல ஓடிடியில் ரிலீஸாகும் சித்தா… எப்போது தெரியுமா?

சனி, 11 நவம்பர் 2023 (07:14 IST)
பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அருண்குமார் அடுத்தடுத்து விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி மற்றும் சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கினார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் பாராட்டுகளையும் வசூலையும் குவித்துள்ளது.

சித்தா திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 30  கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்போது படத்துக்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. நல்ல படம் என்ற வாய்வழி விமர்சனங்கள் வழியாகவே இந்த படத்துக்கு விளம்பரம் கிடைத்து இப்போது பிக்கப் ஆகியுள்ளது.

ரிலீஸுக்கு முன்னர் இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி வியாபாரம் நடக்கவில்லை. இந்நிலையில் இப்போது நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில் விஜய் டிவி சேட்டிலைட் உரிமையையும், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் ஓடிடி உரிமையையும் நல்ல விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் சித்தா திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நவம்பர் 17 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்