ஹாரிஸ் ஜெயராஜின் கம்பேக் படம்…. லெஜண்ட் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வியாழன், 7 ஏப்ரல் 2022 (16:22 IST)
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் லெஜண்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது 

வேல்ராஜ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் சரவணன் ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

இதையடுத்து இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சமீபமாக பெரிய அளவில் படங்கள் இல்லாமல் இருக்கும் நிலையில் இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்