கமல் ஹாசனின் மூத்த மகள் என்ற மிகப்பெரிய வாரிசு ப்ராண்டுடன் தமிழில் ஏழாம் அறிவு படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரம், குழந்தை பாடகி என தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.
இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். மும்பையில் காதலனுடன் வசித்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.
மன்னித்துவிடுங்கள்! நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அதனால் தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை" அன்றாட வாழ்வில் வீட்டிலோ அல்லது படப்பிடிப்பிலோ ஏதேனும் வருத்தப்படுமளவிற்கு நடந்துவிட்டால் நான் மனவுளைச்சலுக்கு ஆளாகி விடுவேன். அப்படித்தான் தற்போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சிகிச்சை எடுத்து வருகிறேன் என கூறினார்.