நீங்களா இது... மாடர்ன் உடையில் வித்யாசம் காட்டும் பிரியா பவானி ஷங்கர்!

செவ்வாய், 28 மார்ச் 2023 (20:21 IST)
தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
 
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 
தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். இதையடுத்து அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் இப்போது வித்யாசமான மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து கவர்ந்திழுத்துள்ளார். 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்