இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் நஸ்ரியா, வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தரியாங், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியது.
இதனை அடுத்து ஷ்ரத்தா ஸ்ரீநாத், தல 59 படத்தில் நான் நடிப்பதாக வந்த வதந்திகள் உண்மையே என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்னர் தல 59 படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற வதந்திகள் பரவியது.