விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி இவர்தானாம்!

சனி, 21 ஆகஸ்ட் 2021 (09:54 IST)
நடிகை ஷிவானி நாராயணன் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார். 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். பின்னர் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமாகி பிக்பாஸில் நுழைந்தார்.

பிக்பாஸ் மூலமாக பிரபலமான அவர் இப்போது வரிசையாக சீரியல்களில் நடித்து வருகிறார். ஆனால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ஆவலாக இருந்த நிலையில் இப்போது விக்ரம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்