ஹேப்பி பர்த்டே பூமிகா... வாழ்த்து கூறி ட்ரெண்ட் செய்த ரசிகர்கள்!

சனி, 21 ஆகஸ்ட் 2021 (09:32 IST)
நடிகை பூமிகா சில்லுனு ஒரு காதல், பத்ரி, ரோஜா கூட்டம் ஆகிய படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். 2007 ஆம் ஆண்டு பாரத் தாக்கூர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு நடிப்பிற்கு முழுக்கு போட்டு வீட்டில் செட்டிலானார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். 
 
தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த ஜில்லுனு ஒரு காதல் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இன்றளவும் அந்த படத்தில் இடம்பெறுள்ள முன்பே வா என் என்பே வா என்ற பாடல் இளைஞர்களின் பேவரைட் பிலே லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று தனது 43 வது பிறந்தநாள் கொண்டாடும் பூமிகாவுக்கு அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்