மாநாடு படத்திற்கு நார்வேயில் விருதுகள்! – ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஞாயிறு, 16 ஜனவரி 2022 (10:22 IST)
சிம்பு நடித்த மாநாடு படத்திற்கு நார்வே தமிழ் சினிமா விழாவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த ஆண்டில் வெளியான படம் மாநாடு. கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியானது முதலாக பல தரப்பு மக்களிடமிருந்தும் பல்வேறு வரவேற்புகளை பெற்றதுடன், வசூலிலும் சாதனை புரிந்தது.

அதை தொடர்ந்து தற்போது நார்வேயில் நடந்த தமிழ் சினிமா விழாவில் மாநாடு படத்திற்கு சிறந்த இயக்குனர், வில்லன் நடிகர், எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்