ராம்சரணின் அடுத்த பட இயக்குனர் இவரா?

வியாழன், 1 செப்டம்பர் 2022 (15:30 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர் அடுத்த படம் குறித்த முக்கிய  தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண்.இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தை ராஜமெளலி இயக்கியிருந்தார். இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலீட்டியது.

தற்போது, ராம்சரண், ஷங்கர் இயக்கத்தில், ஆர்.சி15 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் அப்டெட் வெளியாகும் என தெரிகிறது.

இந்த நிலையில், ராம்சரணின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகிறது. தெலுங்கில், மல்லி ராவா, ஜெர்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய கவுதம்   டின்னாரி என்பவர் ராம்சரணின் ஆர்.சி16 வது படத்தை  இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இதது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
 

Please Clarification the present All Going To Rumours About #RC16 has been Schelved or Not @gowtam19 @UV_Creations #RamCharan pic.twitter.com/Fz9kTSnQv4

— Akhil K ❁ (@AlwaysAkhilK) September 1, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்