இயக்குனர் ஆகிறார் நடிகை நித்யா மேனன்: முதல் பட ஹீரோ தனுஷா?

திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (19:42 IST)
நடிகை நித்யா மேனன் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் இயக்கும் முதல் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த வெற்றிக்கு நித்யாமேனன் ஒரு முக்கிய காரணம் என்பது தெரிந்ததே
 
இதனால் நித்யா மேனன் மீது தனுஷ் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் விரைவில் நித்தியாமேனன் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அவர் திரைப்படத்தை இயக்குவது உறுதி செய்யப்பட்டால் அதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே மலையாளத்தில் நித்யா மேனன் ஒரு திரைப்படத்தை தயாரித்து உள்ள நிலையில் விரைவில் மலையாளத்தில் ஒரு படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்