பாடல்களுக்கு மட்டும் இத்தனைக் கோடி செலவா?... ஷங்கரின் கேம்சேஞ்சர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (14:01 IST)
இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் கேம்சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்துக்காக கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதித் தந்துள்ளார்.  இந்த படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் மூலம் முதன் முதலாக தமன் ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார். இதுவரை ஷங்கர் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இருவர்தான் இசையமைத்துள்ளார்கள். இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமம் சுமார் 30 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளை மட்டும் படமாக்க சுமார் 90 கோடி ரூபாய் அளவுக்கு படக்குழு செலவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கர் எப்போதும் தன் படங்களின் பாடல்களை மிகப்பிரம்மாண்டமாக உருவாக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்