பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு இத்தனை கோடி சம்பளமா?
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (11:58 IST)
பிக்பாஸ் தமிழ் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அவரின் ஸ்டைலுக்கு என்றே பிரத்யேகமாக ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இப்போது ஏழாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார்.
கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி அவரின் மார்க்கெட்டை உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. இதையடுத்து அவரின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சீசன் 7-ஐ தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பிக்பாஸில் அதிகபட்சமாக அவர் 15 நாட்கள்தான் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.