பிசாசு 2 டீசரை வியந்து பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!

வெள்ளி, 6 மே 2022 (08:48 IST)
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

மிஷ்கின்  இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிசாசு 2’ .இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸானது.

வழக்கமான மிஷ்கின் ஸ்டைலில் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு இருந்த இந்த டீசர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதைப்பார்த்த இயக்குனர் ஷங்கர் மிஷ்கினை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்