ஒருகாலத்தில் பிரபல கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் படங்கள். மலையாள சினிமா உலகில் அவரின் வளர்ச்சி பிடிக்காமல் அவரை துரத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒரு கட்டத்துக்கு பின்னர் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதனால் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது அது போன்ற வாய்ப்புகளும் அவருக்கு வருவதில்லை.