இந்த படங்களை அடுத்து இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு டன்கி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜி வி பிரகாஷ் குமார் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிக்கும் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் அமித் ராய் விலகியுள்ளார். விலகல் பற்றி பேசியுள்ள அவர் “ராஜ்குமார் ஹிரானிக்கும் எனக்குமான கருத்து வேறுபாடுகளால் சுமூகமாக நான் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன். நான் பணியாற்றிய காட்சிகள் படத்தில் இடம்பெறும்.” என்று கூறியுள்ளார்.