அதிரடியாக கவர்ச்சி செல்ஃபி வெளியிட்டுள்ள நடிகை அமலா பாலுக்கு அவரது ரசிகர்கள் சிலர் அறிவுரை கூறியுள்ளனர். தமிழ் திரையுலகில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அமலா பால், இயக்குனர் விஜய்யுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். எனினும், பல்வேறு காரணங்களால் கணவர் விஜயை அமலா பால் பிரிந்தார். சுதந்திராமாக சுற்றித் திரிய முடியவில்லை என அமலா பால் கூறியதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் கணவர் விஜயை பிரிந்த அமலா பால், தான் சந்தோசமாக இருப்பதை உலகிற்கு தெரிவிக்க வேண்டி, தன்னுடைய கவர்ச்சி படங்களையும், ஹாலிடே சென்று ரிலாக்ஸ் செய்யும் படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
இதனை தொடர்ந்து, உச்சகட்டமாக ஒரு செல்ஃபி-யை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். இஷு அமலாபால் தானா என்றும், இதனை வாவ் என சிலர் புகழ்ந்தாலும், சிலர் ரசிகர்கள் வேதனை அடைந்து அட்வைஸ் வழங்கி வருகிறார்கள்.