தயாரிப்பாளரான நீலிமா ராணி....

சனி, 7 அக்டோபர் 2017 (19:13 IST)
பிரபல சீரியல் நடிகையான நீலிமா ராணி, தயாரிப்பாளராக மாறியுள்ளார்.


 
 
சின்னத்திரையில் பிரபலமானவர் நீலிமா ராணி. ஏகப்பட்ட சீரியல்களில் நாயகியாக நடித்தவர், தற்போது ஒளிபரப்பாகிவரும் ‘வாணி ராணி’ சீரியலில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல, 50க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். குழந்தையில் இருந்தே இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நீலிமா ராணி, தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். சினிமாவில் இல்லை, சீரியலில்தான். ‘நிறம் மாறாத பூக்கள்’ என்ற சீரியலைத் தயாரிக்கிறார் நீலிமா ராணி. முரளி, நீஷ்மா, அஷ்மிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தினேஷ் இந்த சீரியலை இயக்குகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்