அவரது இடுப்பில் கை வைத்து அனைத்து பிடித்தார், முத்தம் கொடுத்தார், அடிக்கடி கட்டிப்பிடித்தார் என இணையவாசிகள் சினேகன் மீது கட்டிப்பிடி குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர். இந்நிலையில் இன்று வெளியான புரோமோ வீடியோவில் ஓவியா அழுகிறார், அவருக்கு ஆறுதல் சொல்ல முயலும் சினேகன் அவரையும் கட்டிப்பிடிக்க முயல்கிறார். ஆனால் ஓவியா அவரது கையை தன்னை அனைக்க விடாமல் பார்த்துக்கொள்கிறார்.
ஆனாலும் சினேகன் ஓவியாவை கட்டிப்பிடிக்கு முயற்சிக்கிறார். இதனால் இணையத்தில் உள்ள ஓவியா ஆர்மி சினேகன் மீது கொலைவெறியில் உள்ளனர். அவர்கள் டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் சினேகன் குறித்து விமர்சித்து வருகின்றனர். சினேகன் தொடர்ந்து பெண்களை கட்டிப்பிடித்து வருவது இந்நிகழ்ச்சியை பார்க்கும் பெண்கள், குழந்தைகள், ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.