திரௌபதி இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா செல்வராகவன்?

சனி, 4 டிசம்பர் 2021 (17:17 IST)
இயக்குனர் மோகன் இயக்கும் அடுத்த படத்தில் செல்வராகவன் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய இரு படங்களும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க பட்டு வியாபார ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்கள். ஆனால் அந்த படத்தின் கதைக்களம் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதனால் சர்ச்சைக்குரிய ஒரு இயக்குனராகவே மோகன் ஜி பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் அவரின் மூன்றாவது படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது. அந்த படத்தில் இயக்குனரும் தற்போது நடிகராகவும் அறியப்படுகிற செல்வராகவன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்