சதீஷ் ஹீரோவாக நடிக்கும் ‘சட்டம் என் கையில்’… கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட சூரி!

vinoth

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (07:43 IST)
தமிழ் திரை உலகின் காமெடி நடிகராக இருந்த சதீஷ் கடந்த சில வருடங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த ‘நாய்சேகர்’  மற்றும் கான்ஜூரிங் கண்ணப்பன் உள்பட  சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சதீஷ் அடுத்து ஹீரோவாக நடித்துள்ள ’சட்டம் என் கையில்’ என்ற படத்தின் படப்பிடிப்பு ரிலீஸாகவுள்ளது. செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாச்சி இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு முத்தையா ஒளிப்பதிவும் மார்ட்டின் டைட்டஸ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். ஜோன்ஸ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறியுள்ள சதீஷ் இந்த படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியுள்ளார். இந்த படத்தின் அறிமுக வீடியோவை சூரி பகிர, அது இப்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்