சங்கமித்ரா படத்தில் சத்யராஜ்?

வெள்ளி, 28 ஜூலை 2017 (16:56 IST)
பாகுபலி படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருக்கும் பிரம்மாண்ட படமான சங்கமித்ராவில் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் சங்கமித்ரா என்ற சரித்திர படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இதில் சங்கமித்ரா கதாபத்திரத்தில் நடிக்க ஆள் தேடி வருகின்றனர். இந்நிலையில் சத்யராஜ் சங்கமித்ராவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்க வைத்தது. பாகுபலி, சிவகாமி வரிசையில் மூன்றவதாக அனைவரும் ரசித்த கதாபாத்திரம் கட்டப்பா. சத்யராஜ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்