15 ஆண்டுகளை நிறைவு செய்த சுப்ரமண்யபுரம் திரைப்படம்… சசிகுமார் நெகிழ்ச்சி வீடியோ!

செவ்வாய், 4 ஜூலை 2023 (15:38 IST)
கடந்த 2008 ஆம் ஜூலை 4 ஆம் தேதி சுப்ரமண்யபுரம் திரைப்படம் ரிலீஸானது. பெரிய நடிகர்கள், இயக்குனர், தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லாமல் ரிலீஸான அந்த திரைப்படம், அதன் திரைக்கதை மற்றும் உருவாக்கம் காரணமாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் விமர்சனப்பூர்வமாக பாராட்டுகளக் குவித்து ஒரு Cult திரைப்படமாக இப்போது வரை கொண்டாடப்படுகிறது.

படத்தில் சசிகுமார், ஜெய், ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்டவர்கள் நடிக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார். மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் இன்று இந்த திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறையவடைந்துள்ளதை அடுத்து தற்போது படத்தின் இயக்குனர் சசிகுமார் படத்தை வெற்றி பெறவைத்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் மறக்காமல் இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்