ஓடிடியில் இன்று முதல் ஜெய் & ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தீராக் காதல்!

ஞாயிறு, 25 ஜூன் 2023 (08:54 IST)
நடிகர் ஜெய் நடிப்பில் உருவான தீராக்காதல் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ஜெய்யுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவானா உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர்.

ரோஹின் வெங்கடேஷ் இயக்கிய இந்த படத்துக்கு சித்துகுமார் இசையமைத்திருந்தார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்த படத்துக்கு ரிலீஸுக்கு முன்னர் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முக்கோணக் காதல் கதையான இந்த படம் திரையரங்குகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் இப்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. இன்று முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்