வெளியானது சர்கார் படத்தின் போஸ்டர்

சனி, 29 செப்டம்பர் 2018 (18:12 IST)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் சர்கார் படத்தின் மற்றுமொரு போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

சில வருடங்களாக படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படமாக சர்கார் உருவாகி வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தைத் தீபாவளி வெளியீடாகக் கொண்டு வர முடிவு செய்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வர்கிறது.

இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. லேசான தாடியுடன் ஸ்டைலிஷான தோற்றத்தில் விஜய் அந்த போஸ்டரில் இடம் பெற்றிருந்தார்.

மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிம்டாங்காரன் எனும் ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. அக்டோபர் இரண்டாம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு நடக்க இருக்கும் நிலையில் இன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக சர்கார் படத்தின் மற்றுமொரு போஸ்டர் வெளியாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்