மேக்கப், லிப்ஸ்டிக்,விக்,கோட் - சரவணா ஸ்டோர் அதிபரை கிண்டலடித்த கஸ்தூரி

சனி, 6 ஜனவரி 2018 (14:08 IST)
நடிகர் ரஜினிகாந்த் அருகில் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் இடம் பெற்றிருக்கும் புகைப்படத்தை குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.

 
சரவணா துணிக்கடை உரிமயாளர் தனது கடை விளம்பரத்திற்காக ஹன்சிகா மற்றும் தமனா ஆகியோருடன் ஜோடி போட்டு நடத்து வருகிறார். இதனால், அவர் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
 
இந்நிலையில், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர விழா மற்றும் கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதற்காக ரஜினி, விஷால், கார்த்தி, ஆர்யா உட்பட பல நடிகர், நடிகைகள் மலேசியா சென்றுள்ளனர்.

 
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சரவணா ஸ்டோர் அதிபரும் கலந்து கொண்டார். அவருக்கு ரஜினிக்கு அருகில் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்நிலையில், அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “ மேக்கப், லிப்ஸ்டிக், விக், கோட் சூட்... அம்மாடியோவ்!  பக்கத்துல, எளிமையா சூப்பர்ஸ்டார்” என கிண்டலடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்