விஜய் ஆண்டனி படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சரத்குமார்!

திங்கள், 8 நவம்பர் 2021 (12:27 IST)
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் சரத்குமார் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளார்.

விஜய் ஆண்டனி தற்போது ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் பிச்சைக்காரன் 2 படத்தில் அவர் நடித்து வருவதோடு இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மழை பிடிக்காத மனிதன் என்று இந்த படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகனுக்கு இணையான வேடத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளாராம். டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பி டையு டாமன் ஆகிய பகுதிகளில் தொடங்க இருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்