சரத்குமார்-சுஹாசினி நடிக்கும் புதிய படம்: பூஜை புகைப்படங்கள் வைரல்!

ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (11:37 IST)
சரத்குமார்-சுஹாசினி நடிக்கும் புதிய படம்: பூஜை புகைப்படங்கள் வைரல்!
சரத்குமார் மற்றும் சுஹாசினி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. 
 
சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ஒன்றினை எம்360 ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தை திருமலைசாமி என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வதி என்பவர் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நந்தா, சுகாசினி, சிங்கம்புலி, சித்திக் உள்ளிட்ட ஒரு சிலர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்