பாலிவுட்டில் பிசியான இயக்குனராக இருந்த பிரபுதேவா இப்போது தமிழ் சினிமாவில் நடிகராக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகிவரும் பொய்க்கால் குதிரை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸானது. இந்த படத்தை ஹர ஹர மகாதேவி மற்றும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி வருகிறார்.