இனிமேல் ரஞ்சித் படத்துக்கு யாரையும் விடமாட்டேன்… மேடையில் அன்புக் கட்டளையிட்ட சந்தோஷ் நாராயணன்!

vinoth

புதன், 4 டிசம்பர் 2024 (07:51 IST)
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்- இசையமைப்பாளர் வெற்றிக் கூட்டணியில் கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த கூட்டணி பா ரஞ்சித்- சந்தோஷ் நாராயணன் கூட்டணி. இவர்கள் இணைந்து உருவாக்கிய அனைத்துப் படங்களின் பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. ஆனால் சார்பட்டா பரம்பரைக்குப் பிறகு இந்த கூட்டணி பிரிந்தது.

கடைசியாக அவர் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது மற்றும் தங்கலான் ஆகிய படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகவில்லை.  இருவருக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால்தான் இருவரும் இணைந்து பணியாற்றுவதில்லை என்று தகவல்கள் பரவின. இதை உறுதிப்படுத்துவது இயக்குனர் ரஞ்சித்தும் ஒரு பேட்டியில் ‘தங்களுக்குள் சிறு சண்டை உள்ளதாக” கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த சூதுகவ்வும் 2 திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சந்தோஷ் நாராயணன் அட்டகத்தி படத்தின் மூலம் தன்னுடைய இசைப் பயணத்தையே ரஞ்சித் மாற்றிவிட்டார் எனப் பேசினார். பின்னர் “இனிமேல் ரஞ்சித் படங்களுக்கு எல்லாம் நான்தான் இசையமைப்பேன். யார் வந்தாலும் இடித்துத் தள்ளிவிடுவேன். இது நான் அவருக்கு வைக்கும் அன்புக் கட்டளை” எனப் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்