இரும்புத்திரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருப்பதால் இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு உரிமை மட்டும் 21 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அஞ்சான் தோல்விக்கு பிறகு லிங்குசாமி மூன்று வருடங்களுக்குப் பிறகு இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் ஒரு முக்கியமான வில்லிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.