வெள்ளை யானை படத்துக்கு பின்னர் இணையும் சமுத்திரக்கனி & யோகி பாபு!
திங்கள், 26 ஜூலை 2021 (10:18 IST)
நடிகர் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு இணையும் யாவரும் வல்லவரே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இயக்குனராக அறியப்பட்ட சமுத்திரக்கனி தனது நடிப்புத்திறமையால் இப்போது 6 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரும் யோகிபாபுவும் இணைந்து நடிக்கும் புதிய படமாக யாவரும் வல்லவரே என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதில் மற்றக் கதாபாத்திரங்களில் ரித்விகா, நான் கடவுள் ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்க உள்ளார்.