சமுத்திரக்கனி இயக்கத்தில் பவண் கல்யாண் நடித்துள்ள ‘ப்ரோ’ டீசர் ரிலீஸ்!

திங்கள், 24 ஜூலை 2023 (08:30 IST)
இயக்குனர் சமுத்திரக்கனி இப்போது பிஸியான நடிகராகி விட்டார். ஆனாலும் இடையில் படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில் ஜி 5 ஓடிடி தளத்துக்காக அவர் இயக்கிய படம்தான் விநோயத சித்தம். நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி பாராட்டுகளைக் குவித்த இந்த திரைப்படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது.

தமிழில சமுத்திரக்கனி நடித்த வேடத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா நடித்த வேடத்தில் சாய் தேஜும் நடிக்கின்றனர். தெலுங்கிற்காக பல மாற்றங்களை திரைக்கதையில் செய்துள்ளார் சமுத்திரக்கனி. ப்ரோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த  படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

தமிழில் ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாத நிலையில் தெலுங்கில் பவண் கல்யாணுக்காக மாஸ் ஆன ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்