கல்லா கட்ட முடிவு செய்த சமந்தா… பாலிவுட்டில் தயாரிப்பாளராக முயற்சி!

vinoth

வியாழன், 7 மார்ச் 2024 (07:50 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இப்போது உடல்நலம் சரியாகி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் சமந்தா. அடுததடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஒப்பந்தம் ஆகி வரும் சமந்தா, பாலிவுட்டில் தயாரிப்பாளராக களமிறங்க முடிவு செய்துள்ளாராம். இதற்காக அவர் மும்பையில் வீடு ஒன்றை வாங்கி அங்கே குடியேற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தன்னை பெரிய ஸ்டார் ஆக்கிய தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முதலீடு செய்யாமல் இந்தி சினிமாவில் சமந்தா முதலீடு செய்வது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்