கடந்த ஆண்டு நாக சைதன்யாவுடன் விவாகரத்து நடந்ததை அடுத்து இருவருமே இன்னும் இரண்டாவது திருமணம் பற்றி பேசவில்லை. இந்நிலையில் ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் நீங்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வீர்களா” எனக் கேட்டுள்ளார். அதற்கு சமந்தா “அது தவறான முடிவு. 2023 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப் படி, முதல் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து விகிதம் 50 சதவீதம் என்றால், இரண்டாவது திருமணம் செய்தவர்களின் விவாகரத்து சதவீதம் 63 சதவீதமாக உள்ளது. மேலும் மூன்றாவது திருமணம் செய்தவர்கள் இடையே விவாகரத்து சதவீதம் 73 சதவீதமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.