சமந்தா நடிக்கும் புதிய வெப் தொடர்.. போஸ்டரோடு அறிவிப்பை வெளியிட்ட அமேசான் ப்ரைம்!

வியாழன், 2 பிப்ரவரி 2023 (16:18 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா அறிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தார். இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர் எந்த படம் மற்றும் விளம்பரங்களிலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் இப்போது சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியுள்ள அவர் வருண் தவானோடு இந்தியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிகிச்சைக்குப் பிறகு சமந்தா பேமிலி மேன் இயக்குனர் ராஜ் & டி கே இயக்கத்தில் அமேசான் ப்ரைம் தயாரிக்கும் ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை அமேசான் ப்ரைம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by prime video IN (@primevideoin)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்