பிரபல நடிகரின் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட சமந்தா… இதுதான் காரணமா?

வியாழன், 2 பிப்ரவரி 2023 (09:11 IST)
ஷிவ் நிர்வானா இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில் ஒரு விபத்துக் காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர் சமந்தாவின் உடல்நலப் பிரச்சனைக் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது சமந்தா உடல்நலம் சரியாகி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் விரைவில் குஷி படத்தின் ஷூட்டிங்கில் இணைவார் என்று சொல்லப்படுகிறது. தற்போது சமந்தா ராஜ் மற்றும் டி கே இயக்கத்தில் உருவாகும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் குஷி படத்தின் தாமதத்துக்காக சமந்தா விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்