சமந்தா சிவகார்த்திகேயன் படம் ஜனவரி மாதிலேயே துவங்கி இருக்க வேண்டும். ஆனால் வேலைக்காரன் பட தாமதத்தால் இதுவும் தள்ளிப்போனது.
தற்போது அந்த படத்தை மே மாதம் துவங்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். ஆனால் மே மாதம் சமந்தா கால்ஷீட் கிடைப்பது கஷ்டம்.
ஏனெனில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படம், விஷாலின் இரும்புத்திரை படங்களிலும் நடித்து வருகிறார் சமந்தா. இதில் இரும்புத்திரை படத்துக்கும் மே மாதத்தில் தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
இது தவிர இரண்டு தெலுங்கு படங்கள் வேறு இருக்கின்றன. ஒரே நேரத்தில் எல்லோரும் கால்ஷீட் கேட்பதால் கால்ஷீட் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார் சமந்தா.
இதி ஒரு பக்கம் இருக்க சமந்தாவின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படங்களில் கமிட் ஆனதால் திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறாராம் சமந்தா. நாக சைதன்யாவும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என தெரிகிறது.
இருப்பினும் அகில் திருமணம் நின்றுபோனதால், நாக சைதன்யாவின் திருமணத்திலும் ஏதேனும் சிக்கல் வந்துவிட கூடாது என்ற அச்சத்தில் இருவீட்டாரும் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.