சமந்தா இதுக்கு சரிபட்டு வரமாட்டாங்க... பிவி சிந்து ஓபன் அப்!

வியாழன், 12 செப்டம்பர் 2019 (17:20 IST)
தன்னுடைய வாழக்கை வரலாறு படத்தில் நடிக்க சமந்தா சரியானவர் இல்லை என பிவி சிந்து தெரிவித்துள்ளார். 
 
சமீபகாலமாக வாழ்கை வரலாற்று படங்கள் அதிகம் எடுக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக விளையாட்டு வீரர்களின் வாழ்கை வரலாற்று படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 
 
அந்த வகையில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தில் நடிக்க சமந்தாவிடம் கேட்கப்பட்டது. சமந்தாவும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்றே தெரிகிறது. 
இந்நிலையில் இது குறித்து பிவி சிந்துவிடம் கேட்ட போது, எனது வாழ்க்கை கதையில் சமந்தாவை விட தீபிகா படுகோன் நடித்தால் பொருத்தமாக இருப்பார். 
 
ஏனென்றால் தீபிகா ஒரு பேட்மிண்டன் வீராங்கனை. ஆனால் எனது கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதை பட தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்